Friday, December 18, 2015

கம்பனும் காவியமும்



அன்பின் ஜெ,

       

வெய்யோன் எதிர்பார்த்திருக்கிறேன்.கர்ணன் பற்றிய பலநூறு கதைகள் நம்மிடையே உலவுகின்றன.நான் சிறுவயதில் அர்ச்சுணன் தபசு எனும் தெருக்கூத்தினை அதன் பின்புலம் பற்றியெல்லாம் அறியாமலே பார்த்திருக்கிறேன்.நாங்களிருந்த மலையின் பழங்குடி மக்களின் விழாவின் ஒரு பகுதியாக மிக அற்புதமான கூத்து அது.கர்ணன் பாஞ்சாலியிடையிலான உறவு அதில்    ஒருநாள் முழுவதும்   நடைபெறும்.என் மனதில் என்றும் நிலைத்த நினைவுகள் அவை.,கர்ணன் வெய்யோனாய் உருக்கொள்வதை உங்கள் எழுத்தில் காண விழைகிறேன்.

      கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்..,
கம்பனின் அற்புதமான இவ்வரிகள் எனக்கு மிக நெருக்கமானவை ., கவியின் எழுச்சிக் கணங்களே இதுபோன்ற வரிகள்.நான் ஏற்கனவே இவ்வரிகள் பற்றி உங்களுக்கு எழுதியாக ஞாபகம்.. கம்பனும் மகாபாரதமும் சானகியும் திரௌபதியும் ஒருங்காக வெண்முரசாய் மாறும் காவியத்தின் உயரிய கணம்.
நன்றி

மோனிகா மாறன்.