ஜெ
துவாரகை இந்திரப்பிரஸ்தம் ஆகிய நகரங்களுக்கும் விஷ்ணுபுரத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை ஆச்சரியப்படுத்துகிறது. விஷ்ணுபுரம் சக்கர வடிவமான நகரம். இவையிரண்டும் மேரு வடிவமானவை. மற்றபடி தெருக்களின் அமைப்பு கோட்டைகள் எல்லாவற்றிலும் ஒரு பொதுவான அம்சம் இருந்துகொண்டே இருக்கிறது
வெவ்வேறுகாலகட்டங்களில் நகரம் என்னவாக இருந்தது என்பதை விஷ்ணுபுரத்திலே பார்க்கிறோம். இந்த நாவல்வரிசைகளிலும் கடைசியில் அதெல்லாம் வரும் என நினைக்கிறேன்
மகாதேவன்