Tuesday, December 15, 2015

வாசிப்புநிலைகள்



ஜெ

வெண்முரசைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம் பல கோணங்களில் நடந்தபடியே இருப்பது நிறைவளிக்கிறது. வெண்முரசின் பல அர்த்தங்களை இவ்விவாதம் வழியாக அறியமுடிகிறது. வெண்முரசு ஒரு சாதனை என்பதில் சந்தேகமில்லை. ஆனல இது எழுதப்பட்டபோது வாசகர்களால் உரியமுறையில் வரவேற்கப்பட்டதா என்ற சந்தேகம் எதிர்காலத்திலே வந்தால் இதெல்லாம் ஆதாரங்கள்

ஆனால் வெண்முரசின் வீச்சுக்கும் அதன் அளவுக்கும் இந்த விவாதங்களெல்லாம் ரொம்ப கம்மி என்னும் எண்ணமும் வந்துகொண்டேதான் இருக்கிறது. எவ்வளவு விஷயங்கள் பேசப்படவேயில்லை. உதாரனமாக இதிலே வரும் தத்துவங்கலை எவருமே பெரிதாகப்பேசவில்லை. யோகமுறைமையைப்பேசவும் ஆளில்லை. esoteric ஆன விஷயங்கள் தனிப்பட்ட முறையிலே அறிந்துகொள்ளவேண்டியவை. ஆனால் மற்றவை பேசப்பேசத்தான் தெளிவடையும்

ஜெயராமன்