ஜெ
அர்ஜுனன் நேமி இருவருமே ஒரு துளி ரத்தத்தைக் குடிக்கிறார்கள். நேமி அறியாமல் குடிக்கிறார். அர்ஜுனன் அதை வேண்டாம் என்று மறுத்தபின் அந்தப்பெண்ணுக்காக குடிக்கிறான். நேமி அதை அறுத்துவிட்டார். அர்ஜுனன் அறுக்கமுடியாமல்தான் கடைசிவரை இருக்கப்போகிறான்
நாம் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் உள்ள அன்றாட அநீதிகளின் மீதுதான் வாழ்கிறோம். நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். அப்பாவிகள் ஏமாற்றப்படுகிறார்கள். குழந்தைகள் சுரண்டப்படுகின்றன. எங்கோ கண்களைமூடிக்கொள்ளாமல் நாம் வாழமுடியவில்லை. ஏதாவது சமாதானம் செய்துகொள்கிறோம்
சமாதானமே செய்துகொள்ளமுடியாதவர்களே இதையெல்லாம் விட்டுவிட்டுப்போகிறார்கள். அவர்களே யோகிகளும் ஞானிகளும் ஆகிறார்கள். அர்ஜுனன் இரண்டுக்கும் நடுவே தடுமாறியவன். அவனுக்கு கீதை சொல்லப்பட்டது அவன் யோகி என்பதனால் இல்லை. அவனுக்கு ஊசலாட்டம் இருந்தது என்பதனால்தான்
சுவாமி