Thursday, December 17, 2015

கண்ணனும் பார்த்தனும்





ஜெ

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

வெண்முரசு எப்போது வரும் என காத்திருக்கிறேன். இந்திரநீலத்தையும் காண்டீபத்தையும் மீண்டும் வாசிக்கிறேன். இரண்டையும் ஒப்பிட்டு வாசித்தேன். என் அலுவலகத்தில் 12 பேர் வாசிக்கிறார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சர்ச்சை வந்தது.

நான் சொன்னேன். அர்ஜுனன் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் உருவம் மாறுவதே காண்டீபம் என்று. பாம்பாகி பெண்ணாகி சாமியாராகி அவன் மாறுகிறான். ஆனால் கிருஷ்ணன் எட்டு மனைவிகளையும் இலகுவாக அடைகிறான். பூப்பறிப்பதுபோல அவர்களை கொய்துவிடுகிறான்

இந்தக்கோணம் மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்

ஜெயராமன்