Friday, December 11, 2015

வெளியே உள்ள பெண்கள்



ஜெ

மகாபாரதத்தில் வரும் பெண்களுக்கெல்லாம் ஒரு தனிப்பட்டியலைப்போட்டால் அதுவே ஒரு புரிதலை அளிக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

உதாரணமாக, ஆரம்பம் முதலே அரசகுமாரிகள் அல்லாத சாதாரணப்பெண்கள் அரசர்களால் திருமணம்செய்துகொள்ளப்படும் நிகழ்வு வந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் பெற்றெடுக்கும்பிள்ளைகளின் விதி அவர்களின் அன்னையரால் முடிவாகிறது

சத்யவதி மீனவப்பெண். குந்தி யாதவப்பெண். இடும்பி, காளிந்தி, ஜாம்பவதி,உலூபி ஆகியவர்கள் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். இப்படி வந்தபடியே இருக்கிறார்கள்

இதைத்தவிர நீங்களே extend செய்தபலர் இருக்கிறார்கள். வியாசரின் மனைவியாகி சுகப்பிரம்மத்தைப் பெற்ற பெண், சிவை, பிரகதி, துரோணரைப்பெற்ற பெண் என பலர்.

இவர்களை எல்லாம் ஒப்பிட்டு ஒரு ஆராய்ச்சி செய்தால் இந்தியா எப்படி குலக்கலப்பு வழியாக உருவாகி வந்திருக்கிறது என்பது தெரியும். குலக்கலப்பை விலக்கும் மனுநீதி பிறகு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது இந்த processதொடரக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது

செம்மணி அருணாச்சலம்