இப்புத்தகங்கள் முன்னுரையுடன் நம் தளத்தில் வெளியிடப்படும் என நினைக்கிறேன். வெண்முரசின் அடர்வையும் வீரியத்தையும் கண்டு அஞ்சி படிக்காமல் விட்டவர்களுக்கு இது ஒரு முன் பயிற்சி நூல்களாக அமையும். நான் ஒருவருக்கு வெண்முரசின் முதல் நூலை வாங்கிப்பரிசளித்தேன். அவர் இன்னும் படிக்கவில்லை. அவர் இலக்கிய சிறு பத்திரிக்கைகளை படிப்பவர். புறப்பாடு நூலை உருகி உருகி படித்தவர். ஆனால் அவரால் புத்தகத்தின் கனம் (பொருள்) காரணமாக உள் நுழைய முடியாது இருக்கிறார். இது ஒரு சிறந்த ஏற்பாடு. பின் அட்டையில் இது வெண்முரசின் உள்ளடங்கிய கதைகள் என ஒரு அறிவிப்பும் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இதைவைத்து அரசியல் செய்ய சில இணைய வீரர்கள் முயல்வார்கள்
தண்டபாணி துரைவேல்