ஜெமோ
வெண்முரசின் காட்சிகள்
கனவுகளாக மாறிக்கொண்டே இருக்கின்றன. எப்போது குழந்தைக்கதையாக ஆகும் எப்போது சீரியஸான
சைக்காலஜிக்கல் கதையாக ஆகும் எப்போது சாகசக்கதையாக இருக்கும் என்று தெரியாத கதைப்பெருக்காக
உள்ளது ஆகவே அதை லாஜிக்காக வாசிக்காமல் வெறும் காட்சியாகவே வாசித்துப்போவதே நல்லது
என்று முடிவுசெய்தேன். இப்போது யோசிக்கும்போது ஒவ்வொருநாலுளும் ஒவ்வொரு ஊரிலாக அலைந்து
திரிந்து மனமெல்லாம் காட்சிகளகா மாறிவிட்டதுபோன்ற உணர்வினைத்தான் அடைந்திருக்கிறேன்
சகுனி முதலில்
நகர்நுழையும்போது வரும் வெள்ளம் காந்தாரத்தில் அடித்த புயல்கள் சதசிருங்கத்தின் காட்டுத்தீ
என எத்தனை சித்திரங்கள் . பெருவெள்ளம் வந்து சேறு பெருகிய விதர்ப்பம். தூறல் விழுந்துகொண்டே
இருக்கும் யாதவநாடுகள். இந்தியா முழுக்க வாழ்ந்து வந்ததுபோல இருக்கிறது
உச்சம் துவராகைதான். கிருஷ்ணனின் நகரில் வாழ்ந்த அனுபவமே மிகச்சிறந்த இன்பம்
வெண்முரசு பாரதத்தை
பாரதநிலமாகவே ஆக்கிவிட்டது. இந்நாவலின் மிகப்பெரிய வெற்றி என்பது இதுதான்
விஜயகுமார்