Thursday, December 10, 2015

ஜேம்ஸ்பாண்ட்

 
 
ஜெமோ
காண்டீபத்தில் பல பகுதிகளை இன்றைக்கு ஆங்காங்கே எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். காண்டீபம் ஆரம்பிக்கும்போது அது அர்ஜுனனின் வீரசாகசங்களாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அது வீரசாகசங்களில் ஆர்வமிழந்துவிட்டது என்று தோன்றியது கடைசியில் அந்த அபாரமான சேஸிங் வழியாக மீண்டும் சாகசக்கதையாக மாறிவிட்டது
அர்ஜுனனை சாகசங்களில் இருந்து பிரித்தே பார்க்கமுடியவில்லை. அவன் அந்தக்கால ஜேம்ஸ்பாண்ட் . அதை நான் தெளிவாக சின்னவயசிலேயே உணர்ந்திருக்கிறேன். ஜேம்ஸ்பாண்டையே அர்ஜுனன் என்றுதான் நான் நினைத்துக்கொள்வது. அவனுடைய சாக்ஸம்  பெண்கள் உலக எதிரிகள். இயால் ஃப்லெமிங் நம்மிடமிருந்துதான் சுட்டிருக்கிறார்
ஜெயக்குமார்