ஜெ
நேமிநாதரின் கதை மகாபாரதத்திற்கு வெளியே நின்றிருக்கிறது. ஆனால் மகாபாரதத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டுபோவதாகவும் அமைந்திருக்கிறது. மகாபாரதம் என்னதான் சொன்னாலும் வன்முறையைப்போற்றும் பரணி. ஆனால் அகிம்சையின் கதைநாயகனை உள்ளே கொண்டுவந்ததும் அதன் தளமே மாறிவிடுகிறது
நேமிநாதர் கிர்நார் மலையில் ஞானம் பெற்றார். அவரது கோயில் அங்கே இருக்கிறது. நேமிநாதரின் அந்த மலைதான் ரைவதக மலையா? ரைவதக மன்னர் மகபாரதத்தில் உள்ள கதாபாத்திரம்தான் என்பதை நான் போய் சோதித்துப்பார்த்து அறிந்தேன். அனைத்தும் ஒன்றாக இணைவது ஆச்சரியமான விஷயம்தான்
சாரநாதன்