Monday, December 7, 2015

மாநகர்கள்



ஜெ சார்,

இந்திரப்பிரஸ்தம் பற்றிய திரௌபதியின் கனவை வாசித்தபோது அது ஒரு கனவாகவே இருக்கும் என்ற எண்ணம் வந்தது. அதைத்தான் காண்டீபமும் சொல்கிறது. அது முடிவடையாது. ஏனென்றால் அது ஆணவம். பெரிய ஈகோ உள்ளவர்கலெல்லாமே எதையாவது கட்டுகிறார்கள். உலகிலுள்ள மிகப்பெரிய பல நகரங்கள் கட்டி முடிக்கப்படவே இல்லை. இட்லர்கூட ஒரு மாநகரை கட்டும் திட்டம் வைத்திருந்தார்

ஏன் நகரம் என்றால் இந்த உலகத்தையே அவர்கள் தங்கள் விருப்பபபடி அமைக்க நினைக்கிறார்கள். உதாரணமாக ஒரு நகரத்தை மட்டும் அப்படி அமைத்துப்பார்க்கிறார்கள். திரௌபதி அமைக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் உச்சியில் இருப்பது காமத்தின் தேவனாகிய இந்திரன் என்பதே ஆச்சரியமானதுதான்

விஷ்ணுபுரம் இதேபோன்ற நகரம்தான். அதுவும் கட்டிமுடிக்கப்படவே இல்லை

ஜெயராமன்