Wednesday, December 23, 2015

வெய்யோன் யார்?



"சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா? அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன."

கர்ணன் அங்கநாட்டு அரசனானதும் இதை கேட்கிறானா அல்லது இப்பொது வெண்முரசு கதை நிற்கும்  இடத்திலா என தெரியவில்லை. ஆனால் இதுவரை கர்ணன் அறிமுகமாகி சிங்கங்களை வேட்டையாடி மன்னனை காப்பாற்றியதிலிருந்து கம்பில்ய யுத்தம் வரை எந்த அத்தியாயாத்திற்கு பிறகும் இந்த வரியை நாம் சொல்லலாம். அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான்.

"" அணையா வெம்மை கொண்டு எழுந்த அனல்குலத்தோன் ஒருவனின் கதையுடன் இந்த அவைக்கு வந்தேன். துயிலற்றவன், அழிவற்றவன், காய்பவன், கனிபவன்""

இவ்வாறு சொல்லி ஆரம்பித்து  அவன் பரசுராமன் என்று நிறுத்திய போது அதிர்ந்தேன். வெய்யோன் கர்ணன் பற்றியது என அறிந்திருந்த்தால், அதுவரை கர்ணன் என நினைத்துதான் படித்திருந்தேன். இவை அனைத்தும் பரசுராமனுக்கும் பொருந்துவதே என புரிந்த்து.  படிக்க படிக்க அதுவரை மனத்திலிருந்த கர்ணன் போய் பரசுராமர் ஆக்ரமித்து கொண்டார்.
ரேணுகா அந்த கந்தர்வனை கண்டதை படித்ததும் முதற்கனலில் சத்யவதி தன் சேடியிடம் உதடு பிரியாமல் அவன் பேரை கேட்டறியும் வரி ஞாபகம் வந்து நகைப்பு வந்தது. 

பரசுராமரை பற்றி ஒரளவு அறிந்த்தே இதுவரையிலான நாவல்  வரிசைகளில் அவர் வரும் ஓரிரு அத்தியாயங்கள் மூலம்தான். அவரை கர்ணனுக்கு குருவாக பிரயாகையில் படித்திருந்தாலும் அவர்கள் குணத்தால் அவர்களை  இணைந்த்தை படித்து ஆச்சரியமாக இருந்தது.


காளிப்பிரசாத்