Sunday, September 23, 2018

தெய்வ கணம்




ஜெ

பீஷ்மரும் அர்ஜுனனும் போர் புரியும் அந்த உச்சகட்டக் காட்சி மிக அற்புதமான ஒரு கவித்துவத்துடன் இருந்தது. அதிலுள்ள மெடஃபிசிக்கலான வரிகளை முழுக்க வாசித்தாலொழிய அந்தச் சந்தர்ப்பத்தைப் புரிந்துகொள்ளமுடியாது


ஆனால் அந்த முடிவை இருவரில் எவர் எடுப்பார்கள் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் ஆழமாக கண்டுபிடிக்கவேண்டியவை. சலிப்பு வேகம் என மாறி மாறி வந்துகொண்டே இருக்கவேண்டியவை.

காலத்தை நிலைக்க வைக்க முதியவர்கள் விழைகையில் அது ஆயிரம் குளம்புகள் தாளமிட விரைந்து செல்லவேண்டுமென்று இளையோர் விழைகிறார்கள்

என்று சுஜயன் நினைக்கிறான். ஆனால் பீஷ்மர் ஜெயிக்கும்போது அது எதனால் என்று சொல்லப்படுவதில்லை. எண்ணிச்செல்லமுடியாத ஒரு புள்ளியில் அர்ஜுனன் மேல் அம்பு பாய்கிறது. அதை தெய்வக்கணம் என்று வெண்முரசு சொல்கிறது. மனிதர்கள் சுஜயனைப்போல எதையாவது எண்ணிக்கொள்ளலாம். புரிந்துகொள்ள முடியாது

சண்முகம்