Thursday, September 13, 2018

போரிடும் தெய்வங்கள்?



அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் எழுதியிருந்தார் தெய்வங்களின் போர் இது என்று. தெய்வங்களின் போர் என்பது எல்லா புராணமரபுகளிலும் உள்ளதுதான். ஆனால் ஒரு நவீன நாவலான வெண்முரசு தெய்வம் என்பதை எப்படிப்பார்க்கிறது என்பது முக்கியம். அதை ஒரு concept அல்லது inner manifestation  அல்லது  cosmic phenomenon என்றுதான் பார்க்கிறது. தர்மம் ஒரு தெய்வம் என்றால் பசி ஒருதெய்வம், வஞ்சம் இன்னொரு தெய்வம். காமம் இன்னொரு தெய்வம். இந்த தெய்வங்களெல்லாம் எழுந்துவந்து போரிடுகின்றன வெண்முரசில். குருக்ஷேத்திரத்தை இந்த தெய்வங்கள் நடத்திய போராக அது காட்டுகிறது அம்பை எழுந்துவந்தாள் என்றால் அவர்களின் unconscious இல் இருந்து அம்பையின் உருவம் அல்லது ஞாபகம் எழுந்து வந்தது என்றுதான் அர்த்தம். அப்படிப்பார்த்தால் எல்லா போர்களுமே அப்படித்தான்.தெய்வங்கள்தான் போரிடுகின்றன. உலகப்போரே தேசியம் என்னும் தெய்வங்களும் சுதந்திரதேவியும் போரிட்டுக்கொண்டதுதானே


என்.மகாலிங்கம்