அன்புள்ள ஜெ
செந்நா வேங்கை நாவலை
இப்போதுதான் வாசித்து முடித்தேன். வரப்போகும் களப்பலிகளின் ஒரு பெரிய பட்டியல்தான்
மனதிலே தோன்றியது. தவிர்க்கமுடியாதபடி ஒரு பெரிய சோகம்.ஆனால் அந்த அழிவை வாசகனாக எதிர்பார்ப்பதையும்நினைத்தபோது
ஆச்சரியமாக இருந்தது. இது ஏன்? வாசகனாக நான் இந்தக்கதாபாத்திரங்களுடன் நெடுங்காலம்
வாழ்ந்திருக்கிறேன். வெறும் கதைமானுடராக இவர்கள் என்னுடன் இல்லை. இவர்களின் மனம் ஓடும்
வழிகளெல்லாம் எனக்குத்தெரியும். அவர்களாகவே நான் நின்றிருக்கிறேன். அதன்பிறகும் ஏன்
இந்த அழிவுமேல் ஆசை வருகிறது? எனக்கு என்னை நினைத்தே பயமாக இருக்கிறது. இப்படி ஒரு
அழிவுக்கான ஆசை இருப்பவர்கள்தான் இதைத் தொடர்ந்து படிக்கிறார்களா? இந்த அம்சம்தான்
மகாபாரதம்போன்ற போர்கள் தோன்றுவதற்கே காரணமாக இருக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால்
நாம் அனைவருக்குள்ளும் துரியோதனனும் சகுனியும் கனகரும் இருக்கிறார்கள் இல்லையா?
செந்தில்குமார்

