Sunday, September 16, 2018

துன்பியல்




அன்புள்ள ஜெ

ஒருவாசகர் நாம் ஏன் அழிவை விரும்பிப்படிக்கிறோம் என்று கேட்டிருந்தார். உண்மையில் எனக்கு அது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் இப்படி நினைக்கிறேன். நாம் இந்தக்கதையை சின்னவயசிலேயே கேட்டவர்கள். இது கதை, கடந்தகாலம் என தெரிந்துதான் இதை நிஜமாக கற்பனைசெய்து ரசிக்கிறோம். ஆகவே உண்மையில் இதைத் தவிர்க்க நாம் நினைப்பதில்லை. ஆனால் இந்தத் துக்கம் நிஜமான துக்கம் இல்லை. இதைத்தான் கதார்ஸிஸ் என்று காலேஜில் சொல்லிக்கொடுத்தார்கள். உணமையான வாழ்க்கையை கற்பனையில் நடித்து அந்தத்துக்கத்தை அனுபவித்து நாம் ஒரு சப்ளைம் அடைகிறோம். இதையே துக்கமான கலைப்படைப்புகள் செய்கின்றன. எல்லாருக்கும் இந்த அனுபவம் உண்டு. ஆகவேதான் உலகிலே டிராஜிடிகள் அதிகம். நான் காலேஜில் படித்தபோது என் ஆங்கில்ப்பேராசிரியர் டிராஜிடி மட்டும்தான் கலை, மிச்சமெல்லாம் வெறும் விளையாட்டுதான் என்று சொல்வார். அதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது

ஜெயக்குமார்