Tuesday, September 11, 2018

காவியத்தருணங்கள்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் காவியத்தருணங்களைப் பற்றிய ராஜமாணிக்கத்தின் குறிப்பு வெவ்வேறு சந்தர்ப்பங்களை ஞாபகப்படுத்திக்கொள்ள உதவியது. அவற்றை அவர் குறிப்புகளாக எழுதி நேரில் பேசியிருக்கலாம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இதிலுள்ள பிளெண்ட் தான் முக்கியம் என்று. இதிலுள்ளவை காவியத்தருணங்கள். ஆகவே நுட்பமான வாழ்க்கைச்சந்தர்ப்பங்களாகவும் அதேசமயம் புனைவு ஆகவும் உள்ளன. நேரடியான எதார்த்தச் சம்பவங்களாகத் தோன்றவில்லை. பழைய காவியச்சந்தர்ப்பங்களின் ஏஸ்தெடிக்ஸ் மீறாமலிருக்கிறது. ஆனால் அவற்றில் இல்லாதபுதிய ஒரு அம்சமும் உள்ளது. அதைப் பார்வை என்றோ திருப்பிச் சொல்லியிருக்கும்விதம் என்றோ சொல்லலாம். அந்த வேறுபாடுதான் முக்கியமானது என நினைக்கிறேன்

கே. ராஜ்குமார்

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்