அன்புள்ள ஜெயமோகன்
இத்தகைய நாவலை எழுதும்போதுள்ள முக்கியமான சவால் காட்சிவிவரணைதான். ஏனென்றால் இது நம்மால் இன்றைக்கு காட்சியாக காணும் விஷயம் இல்லை. இது முழுக்கமுழுக்க கற்பனையாக நிகழ்வது. ஆனால் ஏற்கனவே பலரால் சொல்லப்பட்ட உவமைகளைக் கையாளவும் முடியாது. அவை க்ளீஷேக்களாகிவிட்டிருக்கும்.
வெண்முரசு போர்க்களத்தில் குறைவாகவே உவமைகளைக் கையாள்கிறது. பெரும்பாலும் அவர்களில் ஒருவரின் மனதில் இன்னொருவரைப்பற்றி எழும் உவமைதான் அது. அது பழைமையான உவமையாகவும் இருக்கவேண்டும். ஆனால் அது வரை பழைய இலக்கியங்களில் சொல்லப்படாததாகவும் இருக்கவேண்டும்
கிளையில் தொங்கி காதலாடும் அரவுகள் என அவன் கைகள் குழைந்தும் வளைந்தும் தேரில் நிறைந்திருந்தன. அசையும் ஆடியிலிருந்து ஒளிச்சரடுகள் என அம்புகள் தெறித்தெழுந்தபடியே இருந்தன
கைகளை பாம்புடன் உவமிப்பது ஆச்சரியமான காட்சியை அளித்தது
எஸ் பாஸ்கரன்