Saturday, September 8, 2018

தரிசனங்களின் வெளிப்பாடு



ஜெ

மதுசூதன் சம்பத் எழுதிய குறிப்பில் இப்படி ஒரு வரி வருகிறது

இந்திய இலக்கிய மரபிலும் உலக இலக்கிய மரபிலும் வெண்முரசு நிகழ்த்தும் வடிவப் பாய்ச்சல்களை அடையாளம் காணும்போது நாம் அந்த விமர்சகவெளியில் ஒரு குறிப்பை எழுதிவைக்கிறோம்.ஆனால் மெய்யியல் மரபுகளில் வெண்முரசு நிகழ்த்தும் புதுமையை அடையாளம் காணும்பொழுது நமக்கேயான தரிசனங்களை நோக்கி ஒரு அடி எடுத்துவைக்கிறோம்

இந்த வரி நானே சொல்ல நினைத்தது. வெண்முரசு பொதுவாக நாவலாகவே வாசிக்கப்படுகிறது. கொஞ்சபேர் மகாபாரதமாக வாசிக்கிறார்கள். வாசிக்கவேண்டியது அது முதற்கனல் முதல் மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்டுவரும் ஒரு பெரிய தத்துவ தரிசனத்தைத்தான். அதை ஒருபக்கம் பொருளியலிலும் இன்னொரு பக்கம் அன்றைய அரசியலிலும் மதத்திலும் கொண்டுசென்று நிறுத்துகிறது. அதைப்பற்றிய விவாதமே வெண்முரசு விவாதமாக ஆகமுடியும்


சந்திரசேகர்