Wednesday, September 19, 2018

முதல் அறைகூவல்



ஜெ

இன்றைய அத்தியாயத்தில் சாத்யகி சொல்கிறான், எல்லைகள் மேல் நாம் தலையை அறைந்து உடைக்கவேண்டும் என்று. அந்த வரி முக்கியமானது. இப்போதுதான் நாவலின் தொடக்கம் புரிகிறது. அம்பை வந்து சொன்னது எல்லைகளை எல்லாம் மீறுங்கள், எதையும் எண்ணி தயங்கவேண்டாம் என்ற அறைகூவலைத்தான். இன்னமும் பலர் எல்லைகளுக்குள்தான் நிற்கிறார்கள். ஆனால் அனைவரும் எல்லைகளை மீறப்போகிறார்கள். எல்லைகளை மீறுவதன் கதைதான் இந்நாவல் என்று தோன்றுகிறது. இன்றைய அத்தியாயத்தில் பீமன் அனைத்து எல்லைகளையும் மீறுவான் என்ரு தெரிகிறது. அம்பைக்கு அவன் கொடுத்த வாக்கு அதுதானே? மகாபாரதப்போரில் அம்பையின் பங்களிப்பு என்பது அந்த வெறியை அவர்களுக்கு அளித்ததுதான். முதற்கனல் முதல் நீண்டுவருகிறது இந்த வெறி

பாஸ்கர்