Friday, September 21, 2018

வெட்டுண்ட தலை



ஜெ


சிலபகுதிகளை வெண்முரசில் விரைவாக வாசித்துச்செல்வோம். பொதுவாக நமக்கு இது போர் போன்ற வேகமாக போகும் பகுதிகளில் வழக்கமாக உள்ளது. ஆனால் அப்போது சில விஷயங்களை நாம் பார்க்காமல் விட்டுவிடுவோம். அப்படி ஒரு வரி..


தேர்முகப்பிலாடிய வீரசேனரின் வெட்டுண்ட தலை அவருக்கெனவே வெட்டி வைக்கப்பட்டதுபோல் தெரிந்தது. திறந்த உதடுகளுக்குள் இரண்டு பற்கள் சற்று எழுந்தன. கண்கள் களைப்பும் சலிப்பும் கொண்டவைபோல் நிலைத்திருந்தன. அவர் குமட்டல் கொண்டு வயிற்றை எக்கி வாயுமிழ்ந்தார். அதுவரை அவர் வீரசேனரின் முகத்தை பலமுறை நோக்கியிருந்தார், அது போரில் ததும்பும் முகங்களில் ஒன்றாக இருந்தது. இறந்த முகம். இங்கே அனைத்து முகங்களும் இறந்தவர்களுடையவைதானா?


நான் இந்த வரியைக் குறித்து வைத்துக்கொண்டேன். போர் என்பது அத்தனைபேரும் சேர்ந்து அடையும் ஒரே உணர்ச்சி. திருவிழாக்களில்கூட எல்லா முகங்களிலும் ஒரே உணர்ச்சிகளைக் காணமுடியும். அதேபோன்றதுதான் போரிலும். ஆனால் வெட்டி வைக்கப்பட்ட தலையும் போரிடும் பிற முகங்களில் ஒன்றாகவே தெரிகிறது

அத்தனைபேரும் இறந்த முகங்களா என சித்ராங்கதர் வியப்பது அபாரமான ஒரு இடம்


ராஜ்