Saturday, September 22, 2018

களத்தில் நிற்கும் பீமன்



ஜெ

பிரயாகை வாசித்துக்கொண்டிருந்தேன். இந்த வரி மீண்டும் வந்து இன்றைய சம்பவங்களுடன் இணைந்துகொண்டது.  “முதல்முறை நீர், இம்முறை நெருப்பிலிருந்து பிறந்தெழப்போகிறீர்கள் மூத்தவரே” என்று அர்ஜுனன் சொன்னான். பீமன் முதலில் கங்கையிலிருந்து உயிர்தப்பி வந்தான். அங்கே நஞ்சை அருந்திக்கொண்டான். அடுத்து வாரணவதத்திலிருந்து உயிர்தப்பி வந்தான். அங்கேயும் மனதில் நஞ்சு நிறைந்தது. அந்த இரு மறுபிறப்புகளின் வழியாகத்தான் அவன் இத்தனை வேகம் கொண்டவனாக ஆனான். அவன் குலாந்தகனாக ஆகும் பரிணாமம் இது. வெண்முரசின் பழைய நாவல்களை ரேண்டம் ஆக புரட்டும்போது இப்படி கிளைமாக்ஸ் வரை வந்துசேரும் ஏராளமாக பகுதிகள் முன்னரே எழுதப்பட்டிருப்பதை காணமுடியும். முழுநாவலையும் படித்தபின் ஆரம்பத்திலிருந்து இன்னொருமுறை வாசிப்பவர்களுக்கே இந்நாவலின் மொத்தச்சித்திரமும் பிடிகிடைக்கும் என நினைக்கிறேன்

சரவணக்குமார்