Monday, September 24, 2018

ஊழ்விளையாட்டு



ஜெ

பீஷ்மரும் அர்ஜுனனும் களத்தில் சரிக்குச் சமானமாக நின்று போர்புரியும் காட்சியை எங்கோ வேறொரு வடிவத்தில் படித்திருக்கிறேன் என்ற எண்ணம் வந்தது. தேடித்தேடி இந்த அத்தியாயத்தில் கண்டுபிடித்தேன். வெண்முகில்நகரத்தில் வருகிறது இது. இளைய யாதவனும் சகுனியும் சதுரங்கம் விளையாடுகிரார்கள். அது பொறுமையின் கலையாக, விதியின் விளையாட்டாக, இன்னும் என்னென்னவோ ஆக மாறிக்கொண்டே செல்கிறது. நாவலின் உச்சமான கவித்துவம் கொண்ட இடங்களில் ஒன்று இது

அதே போன்ற ஒரு தருணம்தான் திசைதேர்வெள்ளத்தில் இந்தப் போர்க்களக் காட்சி ஒருகட்டத்தில் திறமையோ அதிருஷ்டமோ இல்லாமல் ஆகிவிட தெய்வங்கள் முடிவெடுக்கட்டும் என்று இராண்டுபேரும் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.

சாரங்கன்