ஜெ
இந்தப்போர் உவமைகளை மட்டும் தனியாகச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அப்படி ஆரம்பித்தால் மொத்தமான அனுபவமாக ஆகும் வாய்ப்பு இல்லாமலாகும் என்றும் தோன்றியது. பீஷ்மரின் கொடூரமான போர்விளையாட்டைச் சொல்லி கொலைகளை இலை நுனி நீர்க்குமிழிகளைத் தொட்டு உடைத்து விளையாடும் சிறுமைந்தர் போலிருந்தார். என்று வர்ணித்துக்கொண்டு போகும் இடம் பயத்தை உருவாக்கியது. உயிர்கள் வெறும் குமிழிகள் என்று ஆகின்றன. பெரிய நுரைபோல படை தெரிகிறது. இத்தனை அபத்தமாக ஒரு படையை விவரித்து வாசித்ததே இல்லை.
சுரேஷ்குமார்