அன்புள்ள ஜெயமோகன்
ராஜகோபாலன் அவர்களின்
கட்டுரையை நான் முன்பு வாசிக்கவில்லை. ஆகவே எனக்குத்தெரிந்திருக்கவில்லை. இப்போது வாசித்தபோது
ஏராளமான தெளிவுகள் கிடைத்தன. வெண்முரசின் கலைவையான இயல்பு பிடிகிடைக்காமல் நான் குழம்பிக்கொண்டே
இருந்தேன். சில இடங்களில் அது வரலாறும் தத்துவமும் பேசுகிறது. திடீரென்று சாகசக்கதையாக
மாறுகிறது. போர்களே சிலசமயம் குழந்தைகளுக்கான காமிக் போலவும் சிலசமயம் டால்ஸ்டாய் போன்ற
யதார்த்தமாகவும் உள்ளன. புரிந்துகொள்ள மிகவும் கடினமாக உள்ளது என நினைத்தேன். அவ்வப்போது
பிழையாக போய்விடுகிறது என்றும் நினைத்தேன். இந்நாவலில் எங்கே கிளாஸிசம் எங்கே ஃபோக்லோர்
வருகிறது என்று பார்க்கவேண்டும் என்று இப்போது தெரிகிறது.
ராஜ் கண்ணன்