Friday, September 7, 2018

அலைகள்



அன்புள்ள ஜெமோ

மீள்வாசிப்பில் எனக்குத்தோன்றிய ஒன்று உண்டு. வெய்யோனில் அந்தச்சின்னப்பிள்ளைகள் பீமனின் தோளில் ஏறிக்கொண்டு பெரீந்தையே பெரீந்தையே என கொஞ்சிக்கொண்டு விளையாடும் காட்சியைப்போல குரூரமான காட்சி வேறு இல்லை. அப்போது வாசித்தபோது கடந்துசென்றுவிட்ட காட்சி அது. இன்றைக்கு அற்புதமான காட்சியாக அது உள்ளது. சோகமானதுதான். ஆனால் இன்றைக்கு நினைக்கும்போது அவர்களின் அந்த நீச்சல்காட்சி வாழ்க்கையின் அலைகளைக்காட்டுவதாக உள்ளது. இன்றைக்கு கூட உறவுகள் இப்படித்தான் அலையடித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த நீச்சல்காட்சியை தேடிப்பிடித்து வாசித்தேன். அதை வாசிக்க வாசிக்க ஒரு துக்கமும் கூடவே நிறைவும் உருவாகிறது ஏன் என்று தெரியவில்லை. அதெல்லாம் அப்படித்தானே என்ற நினைப்பால் உருவானது அந்த துக்கம் என நினைக்கிறேன்

ஆர்.மாதவன்

https://www.jeyamohan.in/83665#.W5EmKegzbIU