Sunday, September 16, 2018

பீமனின் வெறி




அன்புள்ள ஜெ

திசைதேர்வெள்ளம் நாவலில் போர் ஆரம்பிக்கும் காட்சியின் படபடப்பு ஆச்சரியமாக இருந்தது. தோல்விக்குப்பின் அவ்வாறுதான் ஆளாளுக்கு பொறுப்பை இன்னொருவர் மேல் ஏற்றிவைத்துச் சண்டைபோடுவார்கள். பீமனின் குணச்சித்திரம் ஆரம்பம் முதல் அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. சகாதேவன் கொஞ்சம் தன்மையானவன். அவனும் எரிச்சலாகவே இருக்கிறான். அர்ஜுனன் நிலைகுலைந்துள்ளான். கிருஷ்ணன் மட்டும்தான் நிதானமாக இருக்கிறார். அவர்தான் இந்தப்போர் எப்படி முடியுமென்று தெரிந்த ஒருவர்.

போரில் பீமன் ஈவிரக்கமில்லாமல் செயல்படப்போவதாக வாசித்தபோதுதான் அந்தப்படபடப்பு வந்தது . ஏற்கனவே போர்களிலெல்லாம் பீமன் அப்படி ஈவிரக்கமில்லாமல்தான் நடந்துகொள்கிறான். கூடவே ஒரு சர்காஸ்டிக் மனநிலையும் அவனிடம் உள்ளது. அந்த சர்காஸம் தான் அத்தனை கொலைகளைச் செய்பவனாக அவனை ஆக்குகிறது.

எஸ். ராஜேந்திரன்