அன்புள்ள ஜெ
போகிறபோக்கில் ஒரு வரி உள்ளத்தை உலுக்கிவிட்டுச் செல்லும். யாதவர்கள் சததன்வாவை மறக்கவே இல்லை என்பது அப்படிப்பட்டது. அவர்கள் அனைவருமே அன்றைக்கு இளைய யாதவரை வழிபட்டார்கள். அவரை தெய்வமாகவே நினைத்தார்கள்.ஆனால் அவர்களுக்குள் சததன்வாவுக்கும் ஆதரவு இருந்தது. அவன் ஒடுக்கப்பட்டான். கொல்லப்பட்டான். சாதாரண மனிதர்களுக்குத் தண்டனைக்கு ஆளாகிறவர்கள்மேல் ஒரு பரிதாபம் உண்டு. ஒவ்வொரு முறை ஆட்டோசங்கர் வீடு வழியாக ஆட்டோ செல்லும்போதும் ஆட்டோக்காரர் ‘நல்லா இருந்தான் சார், வம்பா அழிஞ்சான். போலிசுக்காரனுக அழிச்சிட்டாங்க” என்பார். அவர் எல்லா தப்புகளையும் செய்தாலும் அவர்மேல் கொஞ்சம் அனுதாபம் உண்டு. ஏனென்றால் சததன்வா செய்தவற்றை எல்லாம் இவர்கள் அனைவருமே செய்யக்கூடியவர்கள்தான்
மனோகர்