ஜெ
உங்கள் போர்க்கள வர்ணனையில் ஒரு விஷயம் என்னை அலைக்கழிக்கிறது. முதலில் மிக ஒழுங்கான வியூகங்களைச் சொல்கிறீர்கள். ஆனால் போர் ஆரம்பித்ததுமே கொந்தளிப்பான கலவையான பெருங்கூட்டத்தை வர்ணனைகள் காட்டுவதுபோலத் தெரிகின்றது. ஆனால் வியூகமும் தொடர்ந்துபேசப்படுகிறது. இடைவெளியே இல்லாமல் இந்த இரண்டு கோணங்களும் கலந்து கலந்து வருகின்றன. சஞ்சையன் பார்த்தால் ஒரு லென்ஸில் வியூகம் தெரியும். மறு லென்ஸில் குழப்பமும் கொப்பளிப்பும் தான் தெரியும் என நினைக்கிறேன். இந்த இரண்டையும் ஒரே சமயம் பார்க்கவேண்டும் என்பதுதான் மிகப்பெரிய தத்தளிப்பாக உள்ளது வெண்முரசை வாசிக்கையில். அந்த தத்தளிப்பு வழியாகத்தான் வெண்முரசின் கிரான் பிக்சர் கிடைக்கிறது என தோன்றுகிறது. வியூகமாக ஒட்டுமொத்தமாகவும் தனிமனிதர்களாக இஷ்டத்துக்கு பாய்ந்தும் போரிடுகிறார்கள் என நினைக்கிரேன்
சிவக்குமார் லட்சுமணன்