ஜெ
கங்கை அம்பையைப்பற்றிச்
சொல்லும் இந்த வரி என்னைக் கண்கலங்க வைத்துவிட்டது
அம்பையுடன் கங்கை
கடுமையாக போரிட்டு சவால்விட்டுவிட்டு வந்திருக்கிறாள். உச்சகட்டமான மோதல் நடந்திருக்கிறது. ஆனால் பீஷ்மரிடம் அம்பையைப்பற்றி
கங்கை இதைச் சொல்கிறாள்.
அம்பையும் கங்கையும்
ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள். நீரும் நெருப்பும். அதை அவர்களே அறிவார்கள். இன்றைக்கு
அம்பை பீஷ்மரைக் கொல்ல வருகிறாள். ஆனால் முன்னால் அவள் வேறொரு வடிவில் பீஷமரைக் காக்கவும்
வந்தாள். முதற்கனல் நாவலிலேயே அது வரும்
பாஸ்கர்