அன்புள்ள ஜெ
ஈரோட்டில் கூட்டிய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் சமீபத்தில் இந்தத் தளத்தில் மிக முக்கியமானவையாக இருந்தன. புதிய வெளிச்சத்தை வெண்முரசு நாவல்கள்மேல் உருவாக்கின. இந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்புக்குத்தேவையாக இருப்பது மேலதிகமாக வாசித்தவர்களின் வாசிப்புகள்தான் தேவையாக உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவும் முக்கியமான இடங்களைத் தவறவிடாமலிருக்கவும்தான் இந்த வாசிப்புகள் தேவைப்படுகின்றன. இந்த நாவலின் மிகப்பெரிய விரிவுகாரணமாக இதை வாசிப்பதிலும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதிலும் நிறையவே சிக்கல்கள் உள்ளன. ஆகவே ஒரு விரிவான விவாதம் தேவையாக உள்ளது. இந்தக்கட்டுரைகள் அந்தத்தேவையை நிறைவுசெய்கின்றன.
இந்தக்கட்டுரைகளில் ராஜகோபாலன் அருணாச்சலம் மகாராஜன் மதுசூதனன் சம்பத் தாமரைக்கண்ணன் ஆகியோரின் கட்டுரைகள் நேர்த்தியானவையாக எழுதப்பட்டிருந்தன. மற்றக்கட்டுரைகளும் முக்கியமானவை. ஆனால் அவற்றில் சில கட்டுரைகள் கட்டுரைகள்போல அல்லாமல் குறிப்புகளக இருந்தன. ஆகவே கவனமாக வாசிக்கவேண்டியிருந்தது
கட்டுரையாசிரியர்களுக்கு நன்றி
எம்..ராகவேந்திரன்