Friday, September 14, 2018

வேறுவாசிப்பு



அன்புள்ள ஜெ

வெண்முரசு பற்றிய கட்டுரைகளை நான் வாசிக்கவில்லை. அதனால் என்னுடைய சொந்தமான பார்வை பாதிக்கப்படும் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நண்பர் ஒருவர் அருணாச்சலம் மகாராஜனின் கட்டுரையை வாசிக்கும்படிச் சொன்னார். அதை வாசித்தபோது நான் கிராதம் நாவலை வாசிக்கவே இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. நான் அர்ஜுனனின் சாகசப்பயணங்களாகவும் அவன் தன்னுடைய பலமும் பலவீனமும் என்ன என்று கண்டடையும் இடங்களாகவும்தான் அந்தக்கதையை வாசித்தேன். அதை இக்கட்டுரையில் உள்ளபடி வேதங்களின் போராக வாசிக்கவில்லை. வேதத்தின் ஆரம்பகாலத் தலைவன் வருணன் என்பதும் பிறகுதான் இந்திரன் என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கிராதம் நாவலே என் வாசிப்பில் மாறிவிட்டது. அக்கட்டுரையை வாசித்தபின் கிராதம் நாவலை மீண்டும் வாசிக்கிறேன்

ஆனந்த் செல்வராஜ்

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்