ஜெ,
அஸ்தினபுரிக்குச் சமானமான ஒரு வைரமாக அஸ்வதந்தம் சொல்லப்படுகிறது. அதை விலையாகக்கொடுத்துத்தான் திருதராஷ்டிரர் நாட்டைப்பெற்றுக்கொள்கிறார். அதை பாண்டு அலட்சியமாகத் தூக்கி விதுரருக்குக் கொடுத்துவிட்டு செல்கிறான். அது அவர் கையில் உள்ளது. இன்று அஸ்தினபுரிக்கு போர் நிகழ்கிறது. அந்த வைரம் அவரிடம் உள்ளது. நான் அஸ்வதந்தத்தின் கதையை மட்டும் ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வாசித்தேன். அது எங்கே வந்துசேரும் என்று ஊகிக்க முடியவில்லை. இந்தப்போரில் அதன் இடமென்ன. அதை எந்த இடத்தில் கொண்டு முடிப்பீர்கள்? சியமந்தகம் போலவே பேராசையும் காமமும்தான் இந்த அருமணிக்கும் அடிப்படை அர்த்தமாக உள்ளது
சுரேஷ்குமார்