ஜெ
பீமன் சொல்லும் ஒரு நுட்பமான வியூகம் ஆச்சரியப்படுத்துகிறது. கலிங்க மன்னர்கள் மூவருமே ஒரே குடும்பம். ஸ்ருதாயுஷின் மகன்கள்தான் பிற இருவரும். அதுவே அவர்களின் பலம். அதையே பலவீனமாகக் கொள்ளலாம் என்று அவன் நினைக்கிறான். கண்னெதிரே ஒருவரைக் கொன்றதுமே பிறர் மனம் தளர்ந்துவிடுகிறார்கள். அவர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிக்கிறான். அப்படி கொலைவெறி ஆடுவான் என்பதை அவன் வீரசேனரைக்கொன்று தலையைத் தேரில் மாட்டிவைப்பதன் வழியாகவே தெரிவிக்கிறான். அந்த மூர்க்கம் அவர்களை எல்லாம் பதறச்செய்துவிடுகிறது. முதல்நாள் பீஷ்மர் இளையவர்களைக் கொன்றார் என்றால் இப்போது பதிலுக்கு பீமன் அதைச் செய்கிறான். ரத்தம் ரத்தத்த்தால் சமன்செய்யப்படுகிறது
ராஜேஷ்