Saturday, September 15, 2018

பீஷ்மரின்கதை



அன்புள்ள ஜெ

மகாபாரதப்போரின் முதல் பத்துநாட்களும் பெரிய நிகழ்ச்சிகள் எவையும் இல்லை. மூலமகாபாரதத்தில் திரும்பத்திரும்ப ஒரேவகையான விரிவான போர்வர்ணனைகள்தான் வருகின்றன. ஆகவேதான் பிற்காலத்தில் மிகவிரிவாக அம்பையின் கதை போன்ற பழைய கதைகளை மீண்டும் சொல்லியிருக்கிறார்கள் [அம்போக்யானம்] அந்தப்போரை எப்படிச் சொல்லப்போகிறீர்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு வந்த ஃப்ரேமிங் அப் மிகச்சிறப்பாக இருந்தது. அதாவது எட்டுமுறை பீஷ்மர் வில்தாழ்த்துவதுதான் இந்நாவல் இல்லையா?

சுவாமி