Sunday, September 9, 2018

போரின் விதை



ஜெ,

வெண்முரசு நாவல்களின் அரம்பத்தில் சத்யவதியிடம் விதுரர் போர் ஒன்று வரவேண்டும் என்று சொல்லி அதற்கான காரணங்களை எல்லாம் சொல்கிறார். அப்போது அவர்களுக்கு அது விளையாட்டாக இருக்கிறது ஆனால் அது உண்மை. ஏனென்றால் அது நம் மனசுக்குள் இருந்துகொண்டு ஆழ்மனசு பேசுவது. அதை விதி என்று சொல்லலாம். வெண்முரசு இந்த ஆழங்களை எல்லாம் ‘தெய்வம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. தெய்வங்கள் எங்கெங்கே எப்படியெல்லாம் வெளிப்படுகின்றன என்று வெண்முரசில் பார்ப்பது ஒரு மிகப்பெரிய வாசிப்பை உருவாக்கும்.

அப்போது விதுரர் பேசியபோது தெய்வம் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறது. அந்தத்தெய்வம்தான் போரை நோக்கி அனைவரையும் கொண்டுசென்றது. நெகெட்டிவாகப்பேசவேண்டாம் என்று சத்குரு சொல்லிக்கொண்டே இருப்பார். ஏனென்றால் நெகெட்டிவான பேச்சு மேலும் நெகெட்டிவான சிந்தனையை உருவாக்கும். நெகெட்டிவான சிந்தனைகள் நமக்குள் விதைபோல உள்ளன. அவற்றை ஏன் நீரூற்றி வலர்க்கவேண்டும். மகாபாரதப்போர் சத்யவதி விரும்பு உருவாக்கிய போர் என்று முதற்கனல் சொல்கிறது

பிரபாகர்