ஜெ
கலிங்கர்கள் மூவரும் ஒரே குடும்பத்தினர். அதுதான் அவர்களின் பலம் என பீமனிடம் சொல்கிறார்கள். அதுதான் அவர்களின் பலவீனமாகவும் இருக்கும். அவர்களை ஜெயிக்க அதையே பயன்படுத்திக்கொள்கிறான். ஒரே குடும்பத்தினரை அவன் கொல்லக்கொல்ல அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து வெறிகொள்கிறார்கள். ஆகவே நிலையழிந்து மூர்க்கமாக போராடுகிறார்கள். அல்லது செயலற்றுவிடுகிறார்கள். போரில் சமநிலையை பேண அவர்களால் முடியவில்லை. அனைவரையும் அவன் கொன்று குவிக்கிறான். இந்தப்போரில் முதல்நாள் பீஷ்மரின் வெறியாட்டு. இப்போது பதிலுக்கு பீமன். மாறிமாறி கொலைதான் செய்கிறார்கள். போர் என்பது கொலை மட்டும்தான் என்று காட்டுகிறது இந்தப்பகுதி
ஆனந்த்