Sunday, September 9, 2018

சுசித்ராவின் குறிப்புகள்



அன்புள்ள ஜெ

நான் இந்தத்தளத்தில் வெளியான கட்டுரைகளைப்பற்றிய வாசகர்களின் கருத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். என் வாசிப்பில் அருணாச்சலம் மகாராஜன் கட்டுரை ஒரு மாஸ்டர்பீஸ். வெண்முரசு பற்றி இதுவரை வந்த கட்டுரைகளிலேயே அதுதான் சிறப்பானது. ராஜகோபாலன், மதுசூதன் சம்பத் கட்டுரைகளும் சிறந்தவை

ஆனால் முன்பு இந்தத்தளத்தில் சுசித்ரா எழுதிய நீண்ட குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. அவற்றைப்பற்றி பெரிதாக ஏதும் எழுதப்படவில்லை. இதில் ஆயிரக்கணக்கான கடிதங்கள் உள்ளன. அனைத்தையும் எவராலும் வாசிக்கமுடியாது. அந்த கூட்டத்தில் சுசித்ராவின் கட்டுரைகளும் மறைந்துவிடக்கூடாது

மகாதேவன்

வெண்முரசு வாசிப்பு

வெண்முரசு வாசகர்கள்