Thursday, September 13, 2018

தந்தையர் பற்றி



ஜெ

தந்தையர் பற்றிய ரகுவின் கட்டுரையை இன்றுதான் வாசித்தேன். முக்கியமான கட்டுரை. வெண்முரசத்தை தந்தையரின் கதையாகவே வாசித்துவிடுகிறது. நான்கூட வெய்யோனில் வரும் இரண்டு தந்தையரின் நீண்ட கதைகள் ஏன் அவ்வாறு சொல்லப்படுகின்றன என்று ஆச்சரியப்பட்டேன். ஜெயத்ரதனின் தந்தையின் கதையும் தீர்க்கதமசின் கதையும். ஆனால் அந்த இரண்டு கதைகளையும் கலந்தால் திருதராஷ்டிரனின் கதை வந்துவிடுகிறது என்று இப்போது தோன்றுகிறது

தந்தையரின்  பாசமும் பிடிவாதமும் கசப்பும் எப்படியெல்லாம் வெண்முரசில் கதையை கொண்டுசெல்கின்றன என்று மட்டும் பார்க்கலாம் சாந்தனுவின் ஆசை ஒரு விஷயம். அதேபோல அதிகம் பேசாத ஒரு தந்தை துருபதன். பிறக்கும்போதே பிள்ளைகளுக்கு பழிவாங்கும் கடமையை அளித்தவன். அதேபொல பரத்வாஜர்/ அவர் மட்டும் துரோணரை ஏற்றிருந்தால் கதையே வேறு

நல்ல கட்டுரை.

சுவாமி

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்