Friday, September 7, 2018

மின்நிலம்

https://www.jeyamohan.in/54321#.W5El6-gzbIW

அன்புள்ள ஜெ

ஒவ்வொரு நாவலில் இடைவெளி வரும்போதும் நான் பழைய நாவல்களை வாசிப்பது வழக்கம். அவ்வாறு இன்றைக்கு வாசித்த பகுதி மழைப்பாடலில் அர்ஜுனனின் பிறப்பு. குந்தியும் குடும்பத்தினரும் பர்ஜன்ய பதத்துக்குச் சென்று அங்கே வாழ்வதும் அர்ஜுனன் அந்த இடிமின்னல்களின் நிலத்தில் பிறப்பதும் அற்புதமான கனவுக்காட்சிகளாக் வடிக்கபட்டிருந்தன. அந்த நிலத்திலேயெ நானும் வாழ்ந்ததுபோலிருந்தது. வெண்முரசில் நீலத்துக்கு அடுத்தபடியாக வாசிக்கத்தக்க பகுதிகள் மழைப்பாடலில் உள்ளன. மிக விரிவான நிலவர்ணனைகள். அங்கேயே போய் வாழ்வதுபோல கனவிலேயே ஆழ்த்துபவை. அந்த நிலத்தில் இடிமின்னல் ஆண்டுமுழுக்க இருப்பதும் மழைவில்லை பல்லாயிரம் மழைவிற்களாகப்பார்ப்பதும் மெய்சிலிர்க்கவைக்கின்றன. மீண்டும் மீண்டும் படிக்க வைக்கின்றன. அதோடு இன்றைக்கு இந்த அழிவுகளும் மரணங்களும் நிகழ்கையில் இவற்றுக்கெல்லாம் மாற்றாக அது இருந்துகொண்டிருக்கிறது. குருஷேதிரப்போரை வாசிக்கையில் அங்கேபோய்த்தான் இளைப்பாறவேண்டும் என நினைக்கிறேன்

ராஜசேகர்