அன்புள்ள ஜெ
அஷ்டவசுக்கள் வந்து
பீஷமரின் உடலில் குடியேறுவது என்ற கற்பனை அபாரமானது. ஏனென்றால் பீஷ்மரின் படைப்பங்கெடுப்பே
மகாபாரதத்தில் மிகவும் மர்மமாக இருக்கிறது. அவர் பாண்டவப்படையில் பாதியை கொன்றழித்தார்.
அவர் மட்டும் முதல் பத்துநாள் பாண்டவர்களை எதிர்த்துநின்றார். அவரை வீழ்த்தியபின் ஒவ்வொருவராக
வீழ்த்துகிறர்கள். துரோணர், சல்யர், கர்ணன், ஜெயத்ரதன், துரியோதனன் எல்லாருக்கும் சேர்த்து
வெறும் ஏழுநாள்தான் போர். அந்த ஆற்றல் எப்படி வந்தது என்பதை கற்பனையால் சொல்வதுபோலிருந்தது
அந்த விஷயம். அது நாவலுக்கு ஒரு கட்டமைப்பையும் அளிக்கிறது
மனோகர்