அன்புள்ள ஆசானுக்கு ,
இன்று மாமலர் வாசித்துக்கொண்டு இருக்கையில் இவ்வரி என்னை கிளர்ச்சி கொள்ள வைத்தது.
" மண்ணில் பலவகையான காதல்கள் மானுடருக்கு நிகழ்கின்றன.கன்னிமேல் இளைஞர் கொள்ளும் காதல் , மைந்தர்மேல் பெற்றோர் கொள்ளும் காதல் , தோழர்கள் கொள்ளும் காதல் .. ஆனால் ஆசிரியனின் மேல் மாணவன் கொள்ளும் காதல் இவையனைத்திலும் முதன்மையானது.பிற காதல்கள் சுடர்கள் என்றால் ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள காதலை சூரியன் எனலாம்."
" ஏனென்றால் விழைவின்பொருட்டும் வெல்வதன்பொருட்டும் கொள்ளும் காதல்கள் விரைவிலேயே சலித்து பொருளிழக்கும்.எல்லையின்றி வெல்லவும் விழையவும் எவரால் இயலும்? . கற்றலோ எல்லயற்றது."
உங்களை ஆசிரியராக கொண்ட பல நூறு பேர்களிள் நானும் ஒருவன். உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் .
சுகதேவ் .
மேட்டூர்.