அன்புள்ள ஜெ
அசங்கனுக்கும் சௌம்யைக்குமான உறவு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது மூத்த நண்பர் ஒருவர் ஒரு விஷயம் சொன்னார். அசங்கன் என்றால் சஞ்சலம் இல்லாதவன் அல்லது தாழாதவன் என்று பொருள். சங்கா என்றால் சஞ்சலம் அல்லது தாழ்வு. முன்பெல்லாம் நீதிபதிகளை சங்கைக்குரிய என்று சொல்வது வழக்கம். சௌம்யை என்றால் பணிவான, மென்மையான என்று பொருள். சௌம்யை உங்கள் கற்பனைக் காதாபாத்திரம். அந்தப்பெயரை இப்படி யோசித்துத்தான் போட்டிருப்பீர்களா? இல்லை தற்செயலா? தெரியவில்லை. ஆனால் அழகான இணைப்பாக இருந்தது
அரவிந்த்