Saturday, September 22, 2018

அர்த்தம்



ஜெ

மைந்தர்கள் கொல்லப்பட்டு தேரில் விழுந்து மீண்டும் சாகப்போகும் நிலையில் இருக்கிறார் சித்ராங்கதர். ஒரு ஹலூசினேஷன் போல அவருக்கு பழையவை நினைவுக்கு வருகின்றன. அவர் ஏன் துரியோதனன் தரப்புக்கு வந்தார் என்பது சொல்லப்படுகிறது. சாவுக்குமுன் அந்தக்காட்சி வரும்போது அதன் அபத்தம் பயங்கரமாக இருக்கிறது. எந்த அர்த்தமும் அந்தக் கணக்குகளுக்குக் கிடையாது. சும்மா சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். மகன்கள் சாகும்போது இவ்வளவுதானா இத்தனை எளிதானதா என்று அவர் பயங்கரமாக திகைக்கிறார். இததனை சாதாரணமாக சாவு அருகிலே இருக்கும்போதுதான் எல்லாவகையான ராஜாங்கக் கணக்குகாளையும் போட்டிருந்தோமா என்று ஆச்சரியப்படுகிறார். அந்த கலவை ஒரு பெரிய அர்த்தம் அளிப்பதாக இருந்தது. போர்க்களத்தை போருக்கு வெளியே செல்லும் விஷயங்களைக்கொண்டு புரிந்துகொள்ள முடிகிறது அப்போது. போரை வைத்து பிறவற்றையும் புரிந்துகொள்ளமுடிகிறது

முருகேஷ்