Friday, September 21, 2018

முதிர்வு



ஜெ


பிரயாகையில் ஓர் இடம். துருபதனை கொண்டுவந்து துரோணர்முன் போடுகிறான் அர்ஜுனன். அவர் புன்னகை செய்கிறார். அவன் மனம் உடைந்துவிடுகிறான். அந்தக் கசப்பு அவனை நகர்த்தி நகர்த்தி இன்னொருவனாக ஆக்குகிறது. சொல்லப்போனால் அவன் தேடும் மெய்ஞானம் அங்கே ஆரம்பிக்கிறது. கடைசியில் அவன் கிருஷ்ணனிடம் கேட்பதும் அதைத்தான். அதற்கான பதிலே கீதை


’இளையவனே, உலகைப்பற்றிய நம்பிக்கைகள் உடைவதன் வழியாகவே சிறுவர்கள் ஆண்மகன்களாகிறார்கள். நீ முதிரத்தொடங்கிவிட்டாய்” என்று அங்கே பீமன் நையாண்டியாகச் சொல்கிறான்.

நான் வெண்முரசை மாறிமாறி படித்துக்கொண்டிருக்கிறேன். இணையத்தில் இன்றைய அத்தியாயம். நூலாக பழைய வெண்முரசு. அப்போது தோன்றியது அர்ஜுனன் அவனே மன்னிக்கமுடியாத ஒரு எல்லைமீறலை அங்கே செய்துதான் boyhood லிருந்து வெளியே வந்தான். இனி இன்னொன்றைச் செய்ய இந்தக்களத்திலே நின்றிருக்கிறான்

சரவணக்குமார்