Tuesday, September 18, 2018

களம்




ஜெ

பீஷ்மரைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த பகுதி வெண்முரசில் இன்று வந்த இந்த வரிதான். அவர் தன் அன்னை கங்கையிடம் சொல்கிறார்


போர்க்களத்தில் வில்லுடன் சென்று நின்றிருக்கையில் அங்கிருந்து அவ்வழியே கிளம்பிச்சென்றுவிடுவதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். போர்முடிந்து வில்தாழ்த்தி கிளம்பும்போது சலிப்பும் கசப்பும் தன்வெறுப்புமென என் உள்ளம் தொய்ந்திருக்கும். ஆனால் போர்முரசுகள் ஒலிக்கக் கேட்டதும் என்னுள் இருந்து நான் அஞ்சும் பிறனொருவன் எழுகிறான். என் வில்லை அவன் ஏந்திக்கொள்கிறான். அவனுக்கு உறவுகளேதுமில்லை. இம்மண்ணில் அவன் எய்தவும் ஏதுமில்லை. அளியும் அன்பும் அறமும் அவனறியாதவை. அம்புகள் இலக்கடைவதையன்றி எதையும் அவன் நோக்குவதில்லை. பழுதற்ற கொலைக்கருவி என மாறி களம்நின்றாடுகிறான்


முக்கியமான வரி இது. இதை வாசிக்க வாசிக்க ஆச்சரியமாக இருந்தது. இதைப்பற்றி என் வகுப்பில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார். நம்முடைய ரிஷிகள் போர்வீரர்களாக ஆனால் என்ன நடக்கும்? அவர்கள் குறிக்கோள் கிடைக்கும் வரை சலிக்காமல் போர் செய்பவர்கள். அவர்களுக்குப் பற்று இல்லை.அவர்கள் எவ்வளவு பெரிய கொலைகாரர்களாக இருப்பார்கள்? அதைத்தான் இப்போது வாசித்தேன் என்று தோன்றியது

சாரங்கன்