Wednesday, September 12, 2018

பேய்களின் போர்





அன்புள்ள ஜெ


ஆக்ரோஷமான தொடக்கமாக இருக்கிறது திசை தேர்வெள்ளம். நடுவிலே த் வருமா வராதா என எனக்கும் நண்பனுக்கும் நடுவே பெரிய சர்ச்சை. திசையைத் தேர்ந்தெடுத்துச் செல்லும் வெள்ளம் என்பதனால் த் வராது என்று சொன்னேன்


வெண்முரசின் முக்கியமான இயல்பு என்பது கலவையான வடிவம்தான். ஒருபக்கம் அது சாகசக்கதை. புராணங்களிலுள்ள சாகசங்களை விட்டுவிடாமல் அப்படியே கொண்டு செல்கிறது. இன்னொரு பக்கம் அது ஒரு யதார்த்தக்கதை. தகவல்களை வழங்குவதிலும் காட்சிகளை கண்முன் நிறுத்துவதிலும் அப்படி ஒரு யதார்த்தம் உள்ளது. நடுவே அது ஃபேண்டஸிகளைக் கலக்கிறது. 


உருவகம் சார்ந்த ஃபேண்டஸியும் சரி, கவித்துவமான ஃபேண்டஸியும் சரி சரியாக கலக்கப்பட்டிருக்கின்றன
இத்தனை பெரிய நூல் - நூல்வரிசை என்று சொல்லலாம். எப்படி இப்படி படிக்கமுடிகிறது என்றால் இது இப்படி உருமாறிக்கொண்டே இருப்பதனால்தான். 

போன நாவலிலேயே தீவிரமாக போர் வந்துவிட்டது. இந்த நாவலில் எதிர்பார்க்கவே முடியாதபடி தெய்வங்கள் வந்து நின்றுபோர் செய்கின்றன. மண்ணைப்போலவே வானமும் போர் செய்கிறது. இந்த நிறமாற்றம்தான் வெண்முரசின் பெரிய சுவாரசியம் என நினைக்கிறேன்


ராஜ்குமார்