அன்புள்ள ஜெ
வெண்முரசின் திசைதேர்வெள்ளம் நாவலில் தெய்வங்கள் வந்து போரில் ஈடுபடுகின்றன. தெளிவாகவே அவை ஒரு கனவு என்று சொல்லப்பட்டுள்ளது. இரவில் அக்கனவில் போர் நிகழ்கிறது. ஆனால் இந்த உருவகத்தின் அழகு என்ன என்று பார்க்கவேண்டுமென்றால் அருணாச்சலம் மகாராஜனின் கிராதம் பற்றிய கட்டுரை மிகவும் உதவியானது. அவர் தெய்வங்களின் தோற்றம் என்ன எப்படி தெய்வங்களின் இடம் மாறியது அதை கிராதம் நாவல் எப்படியெல்லாம் உருவகமாக வர்ணிக்கிறது என்று விளக்கமாகச் சொல்கிறார். அந்த தெய்வங்கள்தான் இப்போது போர்க்களத்தில் வந்து மோதிக்கொள்கின்றன. அவை நெடுங்காலமாக போரிட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. எல்லாப்போரும் உண்மையில் தெய்வங்கள் நடுவிலே நடக்கும்போர்தான்
ஜெயராமன்