Friday, September 14, 2018

கங்கையின் சபதம்



அன்புள்ள ஜெ

பீஷ்மரை ஏன் வெல்லமுடியாது என்பதற்கு அர்ஜுனன் காரணம் சொல்கிறான். அவன் போரின்மீதும் வில்மீதும் பலமுறை அவநம்பிக்கை கொண்டிருக்கிறான். வெண்முரசிலேயே காண்டீபம் நாவலின் இறுதியில் அவன் அகிம்சையை நோக்கிச் செல்லும் இடம் உள்ளது. கிராதமும் அப்படி வில்தாழ்த்தியதன் கதைதான். இமைகக்ணமும் அதுதான். பீஷமர் அப்படித் தயங்கியவரே அல்ல. ஆனால் இப்போது கங்காதேவியிடம் அஷ்டவசுக்கள் வந்து அவர் எட்டுமுறை வில்தாழ்த்தவேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் போர்க்களத்தில் எட்டுமுறை மனம் தளர்ந்து வில்லைக்கைவிடவேண்டும். அது எப்படி நிகழும் என்பது மிகப்பெரிய கேள்விதான்

சாரங்கன்