Wednesday, September 19, 2018

போரில்..



அன்புள்ள ஜெ


போர்க்களம் என்பது ஒரு பெரிய உரைகல் போல. அனைவருக்கும் உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. என் வாழ்க்கையை வைத்துத்தான் இதைப்புரிந்துகொள்கிறேன். எனக்கு  உறவுகளும் நெருக்கமான நண்பர்களும் இருந்தார்கள். ஆனால் திடீரென்று என்னவென்றே தெரியாமல் என் தொழில் அடிவாங்கியது. தரைமட்டமாக அமர்ந்தேன்.

அப்போதுதான் ஒவ்வொருவரின் உண்மையான முகமும் தெரியவந்தது. என் அம்மா தன் பிற பிள்ளைகளுடன் போய்விட்டாள். ஆனால் மனைவி உடன் நின்றாள். அவளும் வசதியான வீட்டுப்பெண். அவளும் போயிருக்கலாம். போகவில்லை. ஆனால் மிக நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டார். தற்கொலை. அந்த முகங்களை என்னால் மறக்கவே முடியவில்லை. அதிலிருந்து மீள சில ஆண்டுகள் ஆகிவிட்டன

கொல்லப்பட்டவர்கள் எப்படி இங்ஙனம் பேருருக் கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்றான் சாத்யகி. “அவர்களின் அனைத்துப் பிழைகளும் சிறுமைகளும் மறக்கப்படுகின்றன. அவர்களின் வஞ்சம் மட்டும் கணந்தோறும் வளர்கிறது. விண்ணளவு பெரியதாகும் ஒவ்வொன்றையும் மானுடர் தெய்வங்களென தொழத் தொடங்கிவிடுகிறார்கள்.

என்றவரியை வாசித்தபோது மனசு நடுங்கிக்கொண்டே இருந்தது. பிறகு பெருமூச்சுடன் நினைத்தேன். இப்படி நிதானமாக இதையெல்லாம் வாசிக்க முடிவதே பெரிய விஷயம் என்று நினைத்தேன். நன்றி

ஜி